Saturday, July 15, 2017

மிஃராஜ் எனும் வின்னுலக யாத்திரை



மிஃராஜ் எனும் வின்னுலக யாத்திரை



நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒரு புறம் வெற்றி மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்றுக் கொண்டிருந்தது .அப்போது நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது இஸ்ரா எனவும் அங்கிருந்து விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டது இஸ்லாமிய வரலாற்றில் " மிஃராஜ் " எனவும் அறியப்படுகிறது. இந்தப் பயணம் நபித்துவம் பெற்று 11 ஆண்டுகளுக்கு பிறகு ஓர் இரவு வேளையில் கஃபாவின் சுற்று சுவராகிய ஹதீம் என்ற இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் அன்னாரின் நெஞ்சு பிளக்கப்பட்டு  ஸம் ஸம் நீரால் கழுவப்பட்டு பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் அது நிரப்பப்பட்டது .இவ்வாறு இதற்கு முன்னர் அன்னாரது வாழ்வில் 3 விடுத்தங்கள் நடைபெற்றிருக்கிறது .மிஃராஜூடைய சந்தர்ப்பத்தில் இறைவனின் அற்புதங்களைக் கானும் வலிமையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் .

அடுத்த கட்டமாக நபி (ஸல்) அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கொண்டு வந்த புராக் எனும் தூய வென்மை நிற வாகனத்தில் ஏறியவராக பைத்துல் மக்திஸை நோக்கி சென்றார்கள் .அங்கு அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள் .முதலாம் வானத்தை அடைந்ததும் அனுமதி பெற்று , அதிலிருந்து ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களை சந்தித்து உரையாடினார்கள் .பிறகு முறையாக ஒவ்வாரு வானத்திலும் அனுமதி பெற்று , இரண்டாம் வானத்தில் யஹ்யா (அலை) அவர்களையும் மூன்றாம் வானத்தில் யூசுப் (அலை) அவர்களையும் நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் ஆறாம் வானத்தில் மூஸா (அலை) அவர்களையும் ஏழாவது வானத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களையும் சந்தித்து உரையாடினார்கள் .அதன் பின்னர் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் பயனித்தார்கள் .அதன் பின்னர் வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட அனுமதிக்கப்படாததோர் இடத்திற்கு எழுபதாயிரம் திரைகளை கடந்து நபி (ஸல்) அவர்கள் மாத்திரம் இனையற்ற இறைவனை துனையின்றி சந்தித்தார்கள். அந்த நேரத்தில்தான் ஐங்காலத் தொழுகையும், சூறா பகராவின் கடைசி மூன்று வசனங்களுள் " ஒர் அடியான் எனக்கு இணை வைக்காத காலமெல்லாம் அவனது பாவங்களை மன்னிப்பேன் " என்ற இறைவாக்குறுதியும் அன்னாருக்கு அளிக்கப்பட்டது இப்புனித யாத்திரையின் போதே தான் கட்டளைகளுக்கு வழிப்பட்டவர்களுக்கு சித்தப்படுத்தி வைத்திருக்கும் சுவனத்தையும் , தன்னை நிராகரித்து தனது கட்டளைகளுக்கு மாறு செய்தவர்களுக்காக தயார் படுத்தி வைத்திகுக்கும் நரகத்தையும் அதிலுள்ள வேதனைகளையும் அன்னாருக்கு அல்லாஹ் காண்பித்தான். இது சம்பந்தமாக நபியவர்கள் நவின்ற பல பொன் மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பல வியக்கத்தக்க விடயங்களை கண்ட பின் தன் பயணத்தை நிறைவு செய்து கொண்டு மண்ணகம் திரும்பினார்கள்.


  விண்ணுலக யாத்திரைக்கான முக்கிய காரணங்கள் .

நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள் .ஒரு நாட்டின் அரசன் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை சுற்றுப் பிரயாணம் சென்று பார்ப்பதை போன்று அகிலத்திற்கும் தலைவரான அன்னாருக்கு அனைத்தையும் அல்லாஹுத்தஆலா காட்ட விரும்பினான்.

சுவர்க்கம் , நரகம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. சுவனத்தில் பல்வேறு இன்பங்களும் , நரகத்தில் பல வகை துன்பங்களும் இருக்கின்றதென இஸ்லாம் உரைக்கிறது .அதனை கண்கூடாக கண்டவர்கள் யாரேனும் உண்டா ? அல்லாஹ் தனது அன்பு நபிக்கு மாத்திரமாவது காட்டி இருக்கலாமே என்ற ஐயங்களுக்கு தெளிவு கொடுப்பதற்கு நாடினான். யாத்திரை மேற்கொண்ட ஆண்டில் நபி (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அன்னாரின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களும் , அன்பு மனைவி கதீஜா அம்மையாரும் இறையடி சேர்ந்திருந்தார்கள். இதனால் மிக்க மன வருத்தத்துடன் இறைவனை தவிற யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் தனக்கு அயலூரான தாயிப் நகரை நோக்கி ஏகத்துவ பிரச்சாரத்திற்கு சென்றார்கள் .அங்கு சென்ற அவர்களை மனிதாபிமானமின்றி கயவர்கள் கல்லாலும், கடும் சொல்லாலும் கண்மணி நாயகத்தை காயப்படுத்தினார்கள். இவ்வாறு துன்பத்துக்கு மேல் துன்பம் கண்ட தன் அன்பரின் துயர் துடைக்கவே வான லோகம் வரவழைத்து அன்னாரின் இன்னல் நீக்கி இன்பக் கடலில் ஆழ்த்தினான் .

பைத்துல் மக்திஸிலிருந்து விண்ணுலக யாத்திரை . மேற்கொண்ட தன் மர்மம்

அல்லாஹு தஆலா தனது படைப்புகள் அனைத்தையும் பைத்துல் மக்திஸ் இருக்கும் இடத்தில் தான் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான் எனவே நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் ஏனெனில் அப்பூமியில் அன்னாரின் பாதம் பட்ட பரகத்தினால் அவர்களின் உம்மத்தினர் அந்நாளில் படும் கஷ்டங்களை இலகுபடுத்துவான் .இது தவிர அனைத்து நபிமார்களின் ஆத்மாக்களையும் அவ்விடத்தில்தான்
அல்லாஹு தஆலா ஒன்று சேர்த்து வைத்துள்ளான் .எனவே நபி (ஸல்) அவர்களை அங்கு வரவழைத்து அவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஏனைய நபிமார்களின் ஆத்மாக்களை கண்ணியப்படுத்த நாடினான்.

விண்ணுலக யாத்திரை கனவா நிஜமா ?

விண்ணுலக யாத்திரையை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் அது கனவுதான் என்று கூறுகின்றார்கள் .அது கனவல்ல என்று நிரூபிக்கும் ஆதாரங்கள் பல உண்டு.

கனவாக இருந்தால் அது பெறும் அற்புதமாக இருக்காது. காரணம் கனவில் இது போன்ற நிகழ்வை காண்பது நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு கூட சாத்தியமே .ஆனால் இஸ்லாம் அதனை மாபெரும் அற்புதமாக முன்வைக்கிறது.

அது கனவாக இருந்தால் அதை மக்கா காபிர்கள் இவ்வளவு கடுமையாக மறுத்திருக்க மாட்டார்கள் .மற்றும் ஈமான் கொண்ட சிலர் மீண்டும் மதமாறியிருக்கவும் மாட்டார்கள்.

"இந்த பயணத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என் கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றார்கள்" என நபியவர்கள் கூறிய வார்த்தை தெளிவாகவே புஹாரி கிரந்தத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறும் நம்பிக்கை அறிவை மிஞ்சியது. அதனால் இஸ்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மார்க்கம் என்பது அர்த்தமல்ல .அதே சமயம் சில விடயங்களில் அறிவை தாண்டி நம்பிக்கை முன்னிலைப்படுத்தப்படும். மிஃராஜை அறிவால் அளக்க நினைத்து தட்டுத்தடுமாறி ஈமானை பறிக் கொடுத்தவர்கள் பலர் உண்டு. அல்லாஹு தஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக.


 (நவ்பான் நிஸ்தார் )

Monday, June 26, 2017

பெருநாளும் இன ஐக்கியமும்






பெருநாளும் இன ஐக்கியமும்

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்)

இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதனால் பிற சமூகங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பவும் இனமுறுவல்களைத் தவிர்க்கவும் பெருநாள் காலங்களில் பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்வது வரவேற்கத்தக்கது :-

இனமுறுவல்களைத் தவிர்க்க......


1. ஷவ்வால் பிறை கண்டதும் அல்லது பெருநாள் தினத்தில் பட்டாசு கொழுத்துவதை முற்றாகத் தவிர்ப்பது.

2. முஸ்லிம்கள் தமது வீடுகளிலுள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளது சத்தங்களை அயல் வீட்டாருக்கு தொந்தரவின்றி குறைத்துக் கொள்வது.

3. உறவினர் களது அல்லது நண்பர்களது வீடுகளுக்கு வாகனங்களில் சென்றால் அந்த வாகனங்களை உரிய இடங்களிலும் முறையாகவும் நிறுத்துவது.

4. பெருநாள் சுற்றுலாக்களின் போது மிதமிஞ்சிய கேளிக்கை, ஆடம்பரம், வீண்விரயம் பிறரது ஆத்திரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளை முற்றாக தவிர்ப்பது

நல்லுறவைக் கட்டியெழுப்ப.....

1. பெருநாள் தினத்திலும் தொடரும் நாட்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களை வீட்டுகளுக்கு அழைத்து விருந்தளிப்பதும் அன்பளிப்புக்களைப் பரிமாறுவதும்

2. வீடுகளுக்கு அழைப்பதில் சிரமங்கள் இருந்தால் அவர்களது வீடுகளுக்குச் சென்று அவற்றைக் கையளிப்பது.

3. விருந்து பரிமாறும் போதும் அன்பளிப்புக்களை வழங்கும் போதும் இன்முகதோடும் நற்புறவோடும் உரையாடும் அதேவேளை மார்க்கத்துக்கு முறணான வார்த்தைப் பிரயோகங்களையும் செயல்களையும் தவிர்ப்பது.

4. பிரதேச மத குருக்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள்,கிராம சேவையாளர்கள் போன்றவர்களுக்கு முஸ்லிம் ஊர்களில் விஷேட பெருநாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து சிற்றுரைகளை நிகழ்த்துவதும் அங்கு இனிப்புப் பண்டங்களப் பகிர்வதும்

5. முஸ்லிம் உத்தியோகத்தர்கள்,அதிகாரிகள் பெருநாள் முடிந்து தத்தமது காரியாலயங்களுக்கு வேலைக்குத் திரும்பும் போது பெரு நாள்(அவுருது)என்ற பெயரில் இனிப்பு மற்றும் உணவுப் பண்டங்களைப் பகிர்வது

6. சைக்கிளோட்டம், கால்பந்து, கிரிகட், கரப்பந்து,எல்லே போன்ற கூட்டான விளையாட்டுப் போட்டிகளை பிற சமயத்தவர்களோடு இணைந்து ஒழுங்கு செய்யலாம்.இந்த நிகழ்வுகளின் போது ஆண்-பெண் கலப்பு போன்ற மார்க்கத்துக்கு முரணான கார்யங்கள் இடம்பெறாத வண்ணம் இஸ்லாமிய வரம்புகளைப் பேணிக்கொள்வது அவசியமாகும்.

இவை சிறுபான்மை முஸ்லிம் சமூக அமைப்பில் பெருநாட்களின் ஊடாக சகவாழ்வை அடைந்து கொள்ள கடைப்பிடிக்க முடியுமான ஒழுங்குகளாகும்.

எமக்குள் நாம்…

1. தாய் தகப்பன் உறவுகளைப் புத்துப்பித்து பலப்படுத்துவோம்!

2. இனபந்துக்களது வீடுகளுக்குச் சென்று குசலம் விசாரிப்போம்!

3. அயல் வீட்டாருக்கு அன்பளிப்பு பரிமாறுவோம்!

4. ஊரிலும் அயல் ஊர்களிலும் உள்ள அனாதைகள்,ஏழைகள், விதவைகள்,பண வசதியற்ற நோயாளிகள்,அங்கவீனர்கள்,இயற்கை அனர்த்தங்களாலும் 30 வருட யுத்த்ததால் பாதிக்கப்பட்டு இன்னும் நிர்க்கதியான நிலையில் இருப்பவர்கள் போன்றோருக்கு அன்பையும் பணத்தையும் பொருட்களையும் கொடுத்து உதவி செய்து அல்லாஹ்வின் அருளையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்வோமாக!

5. சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உம்மத்தின் விமோசனத்துக்காக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

6.எமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பை பாவங்களை தவிர்ப்பதன் மூலமும் நல்லமல்களில் சம்பந்தப்படுவதன் மூலமும் பலப்படுத்திக் கொள்வோம்.!

யா அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வாயாக!

Sunday, April 30, 2017

அல் பாத்திஹா அத்தியாயம்


அல் பாத்திஹா அத்தியாயம்


திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயத்திற்கு அல் பாத்திஹா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது அல் பாத்திஹா என்பதற்கு தோற்றுவாய் ,துவக்கம் , ஆரம்பம் என்று பொருள் தொழுகையில் இந்த அத்தியாயமே ஆரம்பமாக ஒதப்படுகிறது என்பதால் இதற்கு இப்பெயர் வரலாயிற்று .இந்த அத்தியாயத்திற்கு உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை ) எனும் பெயரும் உண்டு .இந்த அத்தியாயமே குர்ஆன் ஏடுகளில் ஆரம்பமாக எழுதப்படுவதாலும் தொழுகையில் ஆரம்பமாக ஓதப்படுவதாலும் இதற்கு இப்பெயர் வரலாயிற்று என இமாம் புஹாரி (ரஹ்) கூறுகிறார்கள் (இப்னு கஸீர் )

பாத்திஹா ஸுறாவின் வேறு பெயர்கள்

இந்த அத்தியாயத்திற்கு மேலும் பல பெயர்கள் உள்ளன அல் ஹம்த் (புகழ் அத்தியாம்) அஷ்ஷிபா (நிவாரணி) அல் வாகிஆ ( பாதுகாப்பளிப்பது) அல் காபியா (போதுமானது) அசாசுல் குர்ஆன் (குர்ஆனின் அடிப்படை) ஆகிய பெயர்கள் அவற்றில் அடங்குகிறது இதனடிப்படையில்தான் நம்முடைய மூத்தவர்கள், உலமாபெருமக்கள் ஏதேனுமொரு நல்ல காரியத்தை ஆரம்பிக்கும் போது அதில் ஒருவர்  "அல் பாத்திஹா " என்று கூற அவருடன் சேர்ந்து மற்றவர்களும்  அல் பாத்திஹா அத்தியாயத்தை ஓதும் வழமை இன்னும் இருந்து வருகிறது

பாத்திஹா சூறாவின் சிறப்பும் அதன் மகத்துவமும்


அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்
நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) “இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)“ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ...

“(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்“ என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா?“ என்று கேட்டார்கள். பிறகு, “நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா?“ என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) “இறைத்தூதர் அவர்களே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!“ என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் “(அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா“ அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும்“ என்று 
கூறினார்கள்

.(சஹீஹ் அல் புஹாரி) 

உபை பின் கஅப் ரலி அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 
கூறினார்கள் தவ்ராத் வேதத்திலோ இன்ஜீல் வேதத்திலோ உம்முல் குர்ஆனைப் போன்றதோர் அத்தியாயத்தை இறைவன் அருளியிதில்லை.அது திரும்பத் திரும்ப ஒதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதாகும் மேலும் அது இறைவனுக்கும் அடியாருக்குமிடையே இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்டதாகும்.  (திர்மிதி, நஸயி)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், ”இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ”இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள்.
அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, ”உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். ”அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் ”அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்)

ஓதிப்பார்க்க சிறந்த அத்தியாயம்

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார்
நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து “எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?“ என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் “உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?“ அல்லது “ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?“ என்று கேட்டோம். அவர், “இல்லை; குர்ஆனின் அன்னை“ என்றழைக்கப்படும் (“அல்ஃபாத்திஹா“) அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்“ என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் “செல்லும் வரையில்“ அல்லது “சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்“ ஒன்றும் செய்துவிடாதீர்கள்“ என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். “இது (“அல் ஃபாத்திஹா“  ) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள்.
இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஸஹீஹ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத்  துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)
மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ் குறித்து அன்னாரிடம் கேட்டேன்.

(ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதி அபூதாவூத்,இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத் ) 

பாத்திஹா அத்தியாயம் தொடர்பாக
அறிஞர்களிடையே நிலவும் கருத்துக்கள் 

இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களும் ஒத்த கருத்துள்ள அவர்களுடைய தோழர்களும் தொழுகையில் அல் பாத்திஹா அத்தியாயத்தைத்தான் ஓத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் குர்ஆனில் எதை ஓதினாலும் செல்லும் என்றும் கூறுகிறார்கள் குர்ஆனில் உங்களுக்கு எது சுலபமானதோ அதை ஓதிக் கொள்ளுங்கள் எனும் (73:20) ஆவது வசனத் தொடரின் பொதுமைக் கருத்தை இவர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள் மேலும் முறை தவறித் தொழுத ஒருவர் தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் " பின்னர் குர்ஆனில் உமக்கு எது சுலபமாகத் தெரியுமோ அதை ஓதிக் கொள்வீராக என அவரிடம் கூறினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (புஹாரி, முஸ்லிம்)
அவருக்கு நபி (ஸல் ) அவர்கள் உத்தரவிட்டார்களே தவிர குறிப்பாக அல் பாத்திஹாவை ஓத வேண்டும் என்று கூறவில்லை

 மற்ற இமாம்களான மாலிக் , ஷாஃபி , அஹ்மத் , (ரஹ்) ஆகியோர் தொழுகையில் அல் பாத்திஹா அத்தியாயத்தையே குறிப்பாக ஒத வேண்டும் என்றும் அதை ஓதாமல் தொழுகை நிறை வேறாது என்றும் கூறுகின்றனர்  அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அல் பாத்திஹா அத்தியாயம் ஓதப்படாத தொழுகை குறைபாடுள்ளது முழுமை பெறாதது என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்  அத்துடன் அல் பாத்திஹா அத்தியாயத்தை ஓதத் தவறியவருக்கு தொழுகையே கிடையாது (புஹாரி, முஸ்லிம்) என்ற ஹதீஸையும், உம்முல் குர்ஆன் (அல் பாத்திஹா ) ஒதப்படாத தொழுகை செல்லாது (ஸஹிஹ் இப்னு ஹுஸைமா ) என்ற ஹதீஸை யும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் இது தொடர்பாக இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன


அடுத்து இமாமைப் பின்பற்றி தொழுகின்றவர் அல் பாத்திஹா அத்தியாயம் ஓதுவது கட்டாயமா? என்பது தொடர்பாக அறிஞர்களிடையே மூன்று விதமான கருத்துகள் நிலவுகின்றன
    

1 இமாமைப் போன்றே இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றவரும் அல் பாத்திஹா அத்தியாயம் ஓதுவது கட்டாயமாகும் (இமாம் ,பின் தொடர்பவர்) இருவருக்கும் பொதுவானவை என்பதே காரணமாகும்

2  எல்லாத் தொழுகையிலும் சப்தமிட்டு ஓதப்படும் தொழுகை சப்தமின்றி ஓதப்படும் தொழுகை எதுவாயினும் இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றவர் அல் பாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டியதில்லை யார் இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றாறோ அவருக்கு இமாமின் ஒதலே அவரது ஓதலாகும் (முஸ்னத் அஹ்மத்) என்ற ஹதீஸ் இக்கருத்தாளர்களுக்கு ஆதாரமாகும் .

3   சப்தமின்றி மெதுவாக ஒதப்படும் தொழுகைகளில் இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றவரும் ஓத வேண்டும் சப்தமிட்டு ஓதப்படும் தொழுகையில் ஓத வேண்டியதில்லை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இமாம் ஏற்படுத்தப்பட்டதே பின்பற்றப்படுவதற்காகத்தான் ஆகவே இமாம் (அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள் அவர் சப்தமிட்டு குர்ஆன் வசனங்களை ஓதினால் நீங்கள் மௌனமாக இருந்து கேளுங்கள் (முஸ்லிம்)
புனித குர்ஆனிலுள்ள மற்ற எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத சில விதிமுறைகள் அல் பாத்திஹா அத்தியாயத்திற்கு இருப்பதாலயே இந்த விளக்கங்களை கூறினோம் . எல்லாம் வல்ல அல்லாஹ்வே மிகவும் நன்கறிந்தவன்  






                                                                                                                                             (சனாஸ் ரியாழி)

Thursday, April 27, 2017

மறுமையில் மனிதனின் கதறல்

மறுமையில் மனிதனின் கதறல்

Saturday, April 8, 2017

அல்குர்ஆனில் தேன்


  தேன்





தேன் அல் குர்ஆன் பரிந்துரைக்கும் மருந்து
அல்லாஹ் அல்குர்ஆனில் தேனை பற்றி கூறும்போது:


وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتاً وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ* ثُمَّ كُلِي مِن كُلِّ  الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاس    
                                                                               إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ 
                                                                                                                                         16 : 68,69

"உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.
அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு."
(அல் குர்ஆன் 16 : 68,69) 

​​♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பிடித்தமான உணவு

عن عائشة -رضي الله عنها- قالت: كان رسول الله -صلى الله عليه وسلم- يحب الحلواء والعسل

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்."
நூல் - ஸஹீஹுல் புஹாரி - 

பொதுவான நோய் நிவாரணி
​​​

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' 
நூல் - ஸஹீஹுல் புஹாரி -  

தேனும் அல்குர்ஆனும் நோய் நிவாரணிகள்

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"நோய் நிவாரணம் தரக்கூடிய இரண்டு விடயங்களை நீங்கள் எடுக்க வேண்டும். தேனும் அல்குர்ஆனும்":
நூல் - இப்னு மாஜா 

 வயிற்றுப்போக்கு குணமாக

عن أبي سعيد -رضي الله عنه-: أن رجلا أتى النبي -صلى الله عليه وسلم- فقال:أخي يشتكي بطنه؟فقال: اسقه عسلا. ثم أتاه الثانية فقال: اسقه عسلا. ثم أتاه الثالثة،فقال: اسقه عسلا. ثم أتاه فقال: قد فعلت. فقال: صدق الله وكذب بطن أخيك، اسقه عسلا، فسقاه فبرأ

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: 
ஒருவர் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி ﷺ அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி ﷺ அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி ﷺ அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி ﷺ அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
​​
நூல் - ஸஹீஹுல் புஹாரி  
​​
பேராபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெற

 عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله -صلى الله عليه وسلم- «من لعق العسل ثلاث غدوات كل شهر، لم يصبه عظيم من البلاء

​அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எவரொருவர் ஒவ்வொரு மாதமும் மூன்று காலைகள் தேன் அருந்தி வருகிறாரோ,  அவரை எந்தவொரு பாரிய ஆபத்துகளும் அண்டாது"
நூல் - இப்னு மாஜா -  

 நல்ல ஜீரண சக்திக்கு

நாம் உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத் தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்து குறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால் பின்பு உடம்பு அவ்வளவுதான். 

பலஹீனமே இல்லாதிருக்க

தேனைப்பற்றிய பழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரை செய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்

1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும்.
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும்.
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும்.
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும். 


Saturday, April 1, 2017

பேரிச்சம்பழம்

            ما أنزل الله داء إلا أنزل له شفاء  


"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை"
ஸஹீஹுல் புஹாரி -  எண் 582




 பேரிச்சம்பழம்

♦ விஷம் சூனியத்தில் இருந்து பாதுகாப்பு பெற








عن سعد بن أبي وقاص - رضي الله عنه - قال: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: من تصبَّح سبع تمراتٍ عَجْوَة لم يضره ذاك اليوم سمٌّ ولا سِحْر  

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்  (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எவரொருவர் தினமும் காலையில் ஏழு அஜ்வா பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு வருகிறாரோ அன்றைய இரவு வரை அவரை எந்த விதமான விஷமோ, சூனியமோ பாதிக்காது"
நூல் - ஸஹீஹுல் புஹாரி 

 பிரசவ வேதனை குறைய (கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்தது)

ஹஸ்ரத் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிரசவ வேதனையால் அவதிப்பட்டபோது அவர்களுக்கு கூறிய மருத்துவ ஆலோசனையை பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும்போது : 

 وهزي إليك بجذع النخلة} أي وخذي إليك بجذع النخلة، قيل: كانت يابسة قاله ابن عباس، وقيل: مثمرة، والظاهر أنها كانت شجرة، ولكن لم تكن في إبان ثمرها، قاله وهب بن منبه: ولهذا امتن عليها بذلك بأن جعل عندها طعاماً وشراباً فقال: { تساقط عليك رطبا جنيا . فكلي واشربي وقري عينا}   أي
طيبي نفساً، ولهذا قال عمرو بن ميمون: ما من شيء خير للنفساء من التمر والرطب 

"இப்பேரீச்ச மரத்தின் கிளையை, நீங்கள் உங்கள் பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குங்கள். அது பழுத்த பழங்களை உங்கள் மீது சொரியும்.
(அப்பழங்களை) நீங்கள் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) நீங்கள் (உங்கள்) கண் குளிர்ந்திருங்கள்!"
(அல்  குர்ஆன் 19:25,26)

♦ விஷத்திலிருந்து நிவாரணம்  

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"அஜ்வா பேரிச்சம்பழம் சுவர்க்கத்து பழமாகும். அதில் விஷத்திற்கு நோய் நிவாரணம் உண்டு"
நூல் - திர்மிதி  

பேரிச்சம் மரத்தின் சிறப்பு

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
 "மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்ச மரமாகும்."
நூல் - ஸஹீஹுல் புஹாரி  எண் 

♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் உணவு: 

அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்  (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்ச செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்"
நூல் - ஸஹீஹுல் புஹாரி -  

 ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தர்பூசணி பழத்துடன் சேர்த்து பேரிச்சம் செங்காய்களை உண்டார்கள்"
நூல் - ஷமாயில் திர்மிதி -  

 அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் முலாம் பழத்துடன் பேரிச்சம் பழங்களை சேர்த்து உண்பதை நான் பார்த்திருக்கிறேன்"
நூல் - ஷமாயில் திர்மிதி - 

வறுமை ஏற்படாதிருக்க

 ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எந்த குடும்பத்தில் பேரிச்சம்பழங்கள் இல்லையோ (அந்த குடும்பம்) பசியால் வாடும்"
நூல் - அபூதாவூத் -  

 ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எந்த வீட்டில் பேரிச்சம்பழங்கள் இல்லையோ அந்த வீட்டில் உள்ளோர் பசியால் வாடுவர்"
நூல் - இப்னு மாஜா -  

உடல் கொழுக்க

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"என்னை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக எனது தாயார் என்னை கொழுக்க வைக்க நாடினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியது எதுவும் பலனளிக்கவில்லை, எதுவரை எனில் வெள்ளரிக்காயை பேரிச்சம்பழத்துடன் சேர்த்து எனக்கு உண்ண தரும் வரையில். அதன் பின்னர் என் உடல் பருமனடைந்தது (என் தாயார் நாடியது போல) "
நூல் - அபூதாவூத் -  

♦ நோன்பு திறக்கும்போது சிறந்த ஆரோக்கியமான உணவு 

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரேனும் நோன்பு திறக்கும்போது, அவர் பேரிச்சம்பழங்களை கொண்டு நோன்பு திறக்கட்டும். பேரிச்சம்பழங்கள் கிடைக்கவில்லையெனில், தண்ணீரை கொண்டு நோன்பு திறக்கட்டும். அது பரிசுத்தமானதாகும்"
நூல் - இப்னு மாஜா -  

இதய நோய்க்கு மருந்து

ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் சுகவீனமுற்று இருந்தேன். நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் என்னை நோய் விசாரிக்க வந்தார்கள். அன்னவர்கள் தமது கையை என் இரண்டு மார்புகளுக்கு இடையில் வைத்தார்கள். அப்போது நான் அதன் குளிர்ச்சியை என் உள்ளத்தில் உணர்ந்தேன். அன்னவர்கள் கூறினார்கள்: நீ இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாய். தாகிபின் சகோதரர் அல் ஹாரித் இப்னு கலாதாவிடம் செல். அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பவர். அவர் மதீனாவின் ஏழு அஜ்வா பேரிச்சம்பழங்களை எடுத்து அவற்றை விதைகளோடு சேர்த்து அரைக்கவேண்டும். பின்னர் அதனை உங்கள் வாயினுள் ஊற்றவேண்டும்"
நூல் - அபூதாவூத் -

வாய்வுதொல்லை நீங்க

இன்று எம்மில் பலர் வாய்வு தொல்லையால் அவதியுறுகின்றனர். அவர்கள் அதிகாலையில் பன், பிஸ்கட், ரொட்டி என்று எதுவும் உண்ணாமல் பதினொரு பேரிச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுதொல்லை நீங்கி நல்ல சுகம் பெறலாம்.



Sunday, March 26, 2017

سـؤال وجـواب

سـؤال وجـواب 

ــــــــــــــــــــــــ
س / من أول من قال السلام عليكم ورحمة الله وبركاته
ج : آدم عليه السلام
ــــــــــــــــــــــــ
س / من أول من خط بالرمل
ج : أدريس عليه السﻻم
ــــــــــــــــــــــــ
س / من أول من أذن في السماء
ج : جبريل عليه السلام
ــــــــــــــــــــــــ
س / من الذي اهتز لموته عرش الرحمن
ج : سعد بن معاذ
ــــــــــــــــــــــــ
س / من هو الذي تستحي منه ملائكة السماء
ج : عثمان بن عفان
ــــــــــــــــــــــــ
س / من هو الصحابي الذي كانت الملائكة تسلم عليه
ج : عمران بن حصين
ــــــــــــــــــــــــ
س / ما أول شي بناه الله عز وجل
ج : السماء
ــــــــــــــــــــــــ
س / من أول من طاف بالبيت العتيق
ج : الملائكة
ــــــــــــــــــــــــ
س / ما هي اول صلاة فرضت على الرسول صل الله عليه وسلم
ج : صلاة الظهر
ــــــــــــــــــــــــ
س / من أول داعية اسلامي
ج : مصعب بن عمير
ــــــــــــــــــــــــ
س / من هو الصحابي الذي يدخل الجنة بغير حساب
ج : عكاشة بن محصن
ــــــــــــــــــــــــ
س / من أول من قال سبحان ربي الأعلى
ج : اسرافيل عليه السلام
ــــــــــــــــــــــــ
س / من هو الذي استشهد فغسلته الملائكة
ج : حنظلة بن ابي عامر
ــــــــــــــــــــــــ
س / من أول من قاتل بالسيف
ج : إبراهيم الخليل عليه السلام
ــــــــــــــــــــــــ
س / من أول من تكلم باللغة العربية
ج : اسماعيل عليه السلام
ــــــــــــــــــــــــ
س / من هو أول رسول الى أهل الارض
ج : نوح عليه السﻻم
ــــــــــــــــــــــــ
س / من بنى الكعبة
ج : الملائكة ورفعها ابراهيم واسماعيل عليهم السلام
ــــــــــــــــــــــــ
س / من هو إلياس
ج : النبي إيلياء عليه السلام
ــــــــــــــــــــــــ
س / من أول من سن القتل والسجن
ج : نمرود
ــــــــــــــــــــــــ
س / من أول أمير في الاسلام
ج : عبدالله بن جحش الاسدي
ــــــــــــــــــــــــ
س / من هو اسد الله
ج : حمزة بن عبدالمطلب
ــــــــــــــــــــــــ
س / من هو أفضل الملائكة
ج : جبريل عليه السلام
ــــــــــــــــــــــــ
س / من هو خطيب الأنبياء
ج : شعيب عليه السلام
ــــــــــــــــــــــــ

Friday, March 24, 2017

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை


 இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை






 பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்.

1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ் (ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி)

   பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்.
   பெண் மக்கள் 4

1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி).

  ஆண் மக்கள்.3

1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ் (ரலி)
3 . இப்ராஹீம் (ரலி).

   நீதி நபி (ஸல்) அவர்களின்
   நிர்வாகஸ்தர்கள்.

1 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப்
   (ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத் இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி).

    கவிஞர்கள்.

1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்( ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி).

    முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள்.

1 . பிலால் (ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி)
3 . ஸ.:துல்கர்ள் (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி).

     பணியாளர்கள் ஆண்கள்.

1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக் (ரலி).

   பெருமானார் (ஸல்)அவர்களின்
   குதிரைகள் ,ஒட்டகங்கள்.

1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3  .லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4  .லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 . வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்

     ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள்

1 . பைளா.
1 . முஸ்னா.
2 . ரவ்ஹா.
2 . முஸ்வீ
3 . ஸ.:ப்ரா
4 . ஜவ்ரா.
5 . சதாத்.

  இஸ்லாமிய போரும் 
  பிறையும்  ஹிஜ்ரியும்.


1 . பத்ரு போர் ரமலான் 01
2 . உஹது போர் ஷவ்வால் 03
3 . சவீக்சண்டை ஷவ்வால் 03
4 . பனு முஸ்தலிக் போர் ஷ.:பான் 05
5 . அஹழ் போர் ஷ.:பான் 05
6 . கைபர் போர் ஷ.:பான் 07
7 . மூத்தாப் போர் ஷ.:பான் 07
8 . மக்கா வெற்றி ஷவ்வால் 08
9 . ஹூனைன் போர் ஷவ்வால் 09
10 . தபூக் போர் ரஜப் 09
11 . தாயிப் போர்.

 நபிமார்களும் அருளப்பட்ட வேதமும் 
 


மூஸா (அலை)
தவ்ராத் இப்ரானி

தாவூத் (அலை)
ஸபூர் யூனானி.

ஈஸா (அலை)
இன்ஜீல் ஸூர்யானி.

முஹம்மது (ஸல்)
குர்ஆன் அரபி.

 கஃபா கட்டுவதற்கு கல்
 எடுக்கப்பட்ட மலைகள்.


1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா.




 நபிமார்கள் மொத்தம் - 1 24 000 மேற்பட்டவர்கள் .
 ரஸூல்மார்கள் -313 பேர்.


குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள் 25 பேர்.313 பேரில் உலுல் அஜ்ம் -5 பேர்.


1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்).

Monday, March 20, 2017

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆண்களின் தாடி BBC யின் மருத்துவ ஆய்வறிக்கை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆண்களின் தாடி
BBC யின் மருத்துவ ஆய்வறிக்கை
.................












===========================================================
ஆண்கள் தாடி வளர்ப்பது சுகாதாரமா, சுகாதாரகேடா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இது தொடர்பாக இதன் சரியான விளக்கத்தை பெறுவதற்காக தொற்று நோயியல் நிபுணரான டாக்டர் கிரீஸ் வான் டுலேகன் (Dr Chris Van Tulleken) தனது ஆராச்சியை இலண்டண் நகர வீதிகளிலிருந்து ஆரம்பித்தார்.
பல்வேறுபட்ட தாடிவைத்த, தாடிவைக்காத ஆண்களின் தாடைப் பகுதியிலிருந்து சிறிய மாதிரிகளை (Sample) எடுத்து அவற்றை University of Central London ஐ சேர்ந்த நுண் உயிரியல் ஆராச்சியாளரான டாக்டர் ஆடம் ரொபார்ட்ஸிடம் (Dr Adam Roberts) மேலதிக ஆராய்சிக்காக கொடுத்தார்.
இந்த மாதிரிகளில் இருந்து நுண்ணுயிர்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இருபது வகையான தாடிகளில் இருந்து நூறு வகையான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை சாதாரணமாக மனித தோலில் காணப்படுபவையென்றும், அதில் ஒருவகை நுண்ணுயிர் மனித உடலில் உள்ளுறுப்புகளில் கணாப்படுவதெனவும் மேலதிக ஆராய்ச்சியில் அறியப்பட்டது.
பாதகமான விளைவுகள் எதனையும் மனிதர்களுக்கு உண்டாக்கக்கூடிய நுண்ணுயிர்கள் எதுவும் காணப்படாததால், தாடி வைப்பது உடல் நலத்திற்கு கேடானது என்ற கருத்து தவறானது என்று கண்டறிந்தார்கள்.
டாக்டர் ஆடமின் அடுத்த நிலை ஆராய்ச்சிதான் ஆச்சரியமான முடிவை காட்டியது.......... .....
இந்த நுண்ணுயிர்களின் நோய் எதிர்ப்புத்தன்மை (Antibiotic)எவ்வாறு இருக்கிறதென்று ஆராய்ந்தபொழுது, தாடி வைத்தவர்களில் காணப்பட்ட நுண்ணுயிர்கள், நோய் எதிர்ப்புத்தன்மையை(Antibiotic ) உருவாக்கக்கூடிய சில இரசாயண பதார்த்தங்களை வெளியிட்டு, இப்பதார்த்தம் மற்றைய நுண்ணுயிர்களை கொன்று இவை தங்களை காப்பாற்றி கொள்கின்றது.
இந்த இரசாயண பதார்த்தத்தின் தன்மை நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அன்டிபயோடிக்ஸை நூறுசத விகிதம் ஒத்துள்ளது.
எனவே தாடி வைத்திருப்பவர்களின் முகம், இயற்கையாகவே
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நுண்ணுயிர்களை கொண்டுள்ளது என்று இவ் ஆராச்சியின் முடிவு தெரிவிக்கிறது.
..........................
தாடியை பற்றிய மற்றுமோர் ஆய்வில்:---
இலண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் 408 (தாடிவைத்த, தாடி வைக்காத)ஆண்களிடையே அவர்களது தாடைப்பகுதியில் உள்ள நுண்ணுயிர்கள்பற்றி ஆராயப்பட்டபொழுது, தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நுண்ணுயிர்களின் பரம்பல், தாடி வைக்காதவர்களைவிட மிக குறைவாக இருந்ததையும், தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி(Antibiotic), தாடி வைக்காதவர்களிலும் பார்க்க கூடுதலாக இருந்ததும் அவதானிக்கப்பட்டது.
இந்த இரண்டு ஆராய்ச்சிகளிலும், ஆண்கள் தாடி வளர்ப்பது அவர்களது முகத்திற்கு பாதுகாப்பையும், உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
References:
Dr. Adam Roberts (iris.ucl.ac.uk)
sciencedirect . com
..................................................
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். "
புஹாரி ஹதீஸ் (5893).

 سنن الصيام✍️🌷     -يسن للصائم أن يتسحر؛ لأن في السحور بركة، ونعم سحور المؤمن التمر، ويسن تأخيره، ومن بركة السحور التقوي على طاعة الله وعبا...